பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் கடுமையான போர் மூண்டுள்ளது.

இந்தச் சூழலில் ஒருவேளை அமெரிக்க தேசம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியான அப்துல் பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

“பகைமை கண்ணோட்டத்தில் அமெரிக்கா நமது அணு சக்தி தளங்களை அழிக்கும் முயற்சியை மேற்கொண்டால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும். முதலில் அது போல ஒன்று நடக்காது. அதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில், நமது பாதுகாப்பு திறன்பாடு மீது நம்பிக்கை உள்ளது. இருப்பினும் அது மாதிரியான சூழல் நடந்து, அமெரிக்கா நமது ஏவுகணை வீச்சின் தொலைவுக்கு அப்பாற்பட்ட எல்லையில் இருந்தால் நமது பதிலடி தாக்குதலை மேற்கொள்ள இந்தியா மட்டுமே இருக்கும்.

மும்பை, டெல்லி என எங்கு வேண்டுமானாலும் எந்தவித யோசனையும் இன்றி தாக்குதல் நடத்த கூடும். அதன் பிறகு என்ன நடக்கிறது, அதன் விளைவு என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. கல்வி அறிவு பெற்றவரோ, பெறாதவரோ, பணம் படைத்தவரோ, பணம் இல்லாதவரோ என யாராக இருந்தாலும் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் ‘ஜிஹாதி’தான்” என அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து வெறும் அனுமானம்தான் என்றாலும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. புவிசார் அரசியல் அசாதாரண சூழல் உலக அளவில் நிலவி வரும் வேளையில் அப்துல் பாசத்தின் கருத்து மேலும் மோசமடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை இந்தியா தாக்கியது. அதைத்தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. இதன் பின்னர் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தமானது. இந்நிலையில், அப்துல் பாசித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

arrest

ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!

March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த

schoo

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

March 22, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம்

Accident

இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

March 22, 2026

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Harshana rushan

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

March 22, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும்

air

பொன்கொரண்டி தாவரத்துடன் சீனப் பயணி ஒருவர் கைது

March 22, 2026

25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர்

hil

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

March 22, 2026

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய

post

எரிபொருள் நெருக்கடி; தபால் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்

March 22, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள்

fazi

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

March 22, 2026

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின்

kokk

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

March 22, 2026

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில்

hu

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ​ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்!

March 22, 2026

அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

d

ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

March 22, 2026

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்

dd

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

March 22, 2026

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்