பயங்கரவாத பிடியிலுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்!

நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை இந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பின்னர், எஞ்சிய 38 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடகிழக்கு நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயிருடன் மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனையடுத்து, கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு கிறிஸ்தவ சங்கம் நேற்று (23) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (21) மற்றும் சனிக்கிழமை (22) ஆகிய இரு தினங்களிலும் 10 – 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தனித்தனியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தமது பெற்றோர்களை சென்றடைந்துள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இன்னும் 253 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

722205477_122297438792194641_4474599319675497240_n

ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

June 15, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப்

wi

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

June 15, 2026

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

j

உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

June 15, 2026

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன்

Elnino

இலங்கையைப் பாதித்துள்ள எல் நினோ காலநிலை

June 15, 2026

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில்

chemma

சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

June 15, 2026

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 15, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

us

ஜூன் -19 இல் அமெரிக்காவுடன் ஈரான் சமாதான உடன்படிக்கை கைச்சாத்து!

June 15, 2026

அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு

kopp

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றம்

June 15, 2026

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்

exa

பெறுபேறுகளில் தாமதம்

June 15, 2026

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பேச்சாளர்

vithu

கரம் போட்டியில் சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி!

June 15, 2026

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட

dd

அபுதாபியில் கைதான பாதாள உலக் குழுவிடம் மேலதிக விசாரணை

June 15, 2026

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட

724114135_122297429312194641_5631255969559338654_n

எந்தவொரு தனி நாடும் புதிய உலக ஒழுங்கைத் தீர்மானிக்க முடியாது: மார்க் கார்னி உரை!

June 15, 2026

அயர்லாந்து: உலகளாவிய சவால்களுக்கு எந்தவொரு தனி நாடோ அல்லது அமைப்போ முழுமையான தீர்வுகளை வழங்கிவிட முடியாது என்றும், உலகம் ஒரு