பயங்கரவாத தடைச்சட்ட நிராகரிப்பு; திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை பதிவு செய்தனர். பின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர்.

‘உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’ என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு. கிழக்கு தழுவிய கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டமானது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்