பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செவவாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டார்.

வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப், இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கவுள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட டித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீட்டுத் திட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்துவதற்கு இலங்கையில் உள்ள சிவில் அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதோடு அது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் அந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பூணாகலை கபரகலைக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிவில் சமூக அமைப்புகளுடனும் பயனாளிகளுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

வீடுகளை கையளிக்கும் முன் அதன் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி சகல வசதிகளுடன் கூடிய ஓர் அழகிய சூழலில் அந்த மக்களைக் குடியமர்த்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருந்தன. அதனடிப்படையில் பூந்தோட்டங்கள், நூலகம், வீடுகளுக்கான முகவரி, பெயர் பலகைகள் என்பன சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளவிருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவின் கள ஆய்வு உத்தியோகத்தர் மகேந்திரன், பூணாகலை தொகுதியின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்டுமான பணியினை மேற்கொள்கின்ற இராணுவத்தின் கேர்னல் உட்பட இராணுவ அதிகாரிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

one nat

‘முழு நாடுமே ஒன்றாக’ ; தேசிய செயற்பாடு – 81 சிறுமிகளுடன் 1,772 சிறுவர்கள் கைது

March 18, 2026

போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

Iran

வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

March 18, 2026

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத்

Mars

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

March 18, 2026

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே

jr

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

March 18, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து

Sanjeeva ethiri

விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

March 18, 2026

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள்

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்