பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 193-ஆக உயர்ந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பீடம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு பசிபிக் பிராந்தியத்தில் “அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதையில்” பயணித்த ஒரு படகை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட கானொலியில் கடலில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு படகின் மீது ஏவுகணை பாய்வதும், அடுத்த சில நொடிகளில் அந்தப் படகு தீப்பிழம்புகளால் சூழப்படுவதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘தி இன்டர்செப்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் 58 தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதில் மொத்த உயிரிழப்புகள்: 193 பேராக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிர் தப்பியவர்கள்: 4 பேர் மட்டுமே எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்ற ஒரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு வார காலத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் “சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளநிலையில்

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற விசாரணை அல்லது தற்காப்புக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் நடுக்கடலில் வைத்து ஏவுகணைகளால் கொல்வது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சுட்டிகாட்டியுள்ளது.

பென்டகன் இதனை “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போர் என நியாயப்படுத்தினாலும், கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்துப் போதுமான ஆதாரங்களை வழங்கப்படாமை சந்தேகதடதிற்கு இடமளித்துள்ளது.

அம்னெஸ்டி மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்: அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என வலியுறுத்தியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அமேரிக்காவிளன் நியாயப்படுத்தலை நோக்கும்போது

இந்தப் பகுதிகளைப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மையமாகக் கருதுப்படுவதால். அமெரிக்காவிற்குள் நுழையும் போதைப்பொருட்களைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான கடத்தல்காரர்களா அல்லது பெரும் கடத்தல் குழுக்களின் தலைவர்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி