நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

அந்தப் பதக்கத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை.

இந்தச் சந்திப்பு “மிகச்சிறப்பாக” அமைந்ததாகக் குறிப்பிட்ட மச்சாடோ, வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக டிரம்ப் மேற்கொண்ட அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இதனைச் செய்ததாக மச்சோடா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் எதிர்கால திசையைத் தீர்மானிப்பதில் செல்வாக்கைப் பெறுவதற்கான மச்சாடோவினுடைய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் மச்சாடோவிற்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு, டிரம்ப் வெளிப்படையாகவே அந்தப் பரிசுக்காகத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

மச்சாடோ தனது பதக்கத்தை டிரம்ப்பிற்கு அளித்திருந்த போதிலும், அது நோபல் பரிசு வழங்கலின் விதிமீறலாக பார்க்கப்படுகின்றது.

நோபல் பரிசை பெறும் நபர் அதனை வேறொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று நோர்வே நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப்புக்கும், மச்சாடோவுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், மச்சாடோவைச் சந்திக்க டிரம்ப் ஆவலுடன் இருந்ததாகவும், அதே சமயம் குறுகிய காலத்தில் நாட்டை வழிநடத்த மச்சாடோவிற்குத் தேவையான ஆதரவு தற்போது இல்லை என்ற தனது “யதார்த்தமான” மதிப்பீட்டில் டிரம்ப் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் வெனிசுலாவின் நீண்டகாலத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிறகு, வெனிசுலாவில் ஜனநாயக செயல்முறைகள் தொடங்கும் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், மதுரோவின் ஆட்சிக்காலத்தைப் போலவே தற்போதும் அடக்குமுறைகள் தொடர்வதாக மச்சாடோ செனட்டர்களிடம் தெரிவித்ததாக ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி கூறினார்.

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், டிரம்ப்பின் ஆதரவால் நாளுக்கு நாள் தனது அதிகாரத்தை வலுப்படுத்தி வருவதாக அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது