நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை ஆராய்ந்து இருந்தார்.

இந்நிலையில் குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளரின் செயற்பாடுகள் விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் முறையற்ற விதத்தில் ஒரு திட்டமிடப்படாத வகையிலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வது மற்றும் நீண்ட நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றமை இடைத்தரகர்களான வர்த்தகர்கள் நெல் ஆலை உரிமையாளர்கள் நெல்லை குறித்த களஞ்சிய சாலைக்கு வழங்குவது தொடர்பிலும் விவசாயிகளால் முறையிடப்பட்ட நிலையில் அவை தொடர்பிலும் கவனமெடுத்து பார்வையிட்டிருந்தார்.

இதனை அடுத்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறித்த இடத்துக்கு வருகை தந்ததோடு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கமும் அங்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது உபாலி சமரசிங்க குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததோடு விவசாயிகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் மக்களுக்கான அரசாங்கத்தில் மக்களுக்கான செயற்பாடுகளே முன்னுரிமை படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை விவசாயிகளுடைய நெல்லை கால தாமதமாக்கியும் வர்த்தகர்களுடைய நெல்லை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில் குறித்த களஞ்சிய சாலையில் இடப்பெற்ற இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் களஞ்சிய சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வவுனியா நகர் பகுதியை அண்டி 2 களஞ்சியசாலைகளும் மடுக்கந்தை பகுதியில் ஒரு களஞ்சியசாலையுமாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஒழுங்குகளை செய்திருந்தனர்.

இதேவேளை தொடர்ந்தும் விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்வதில் காலதாமதமும் அசண்டையீனமும் காணப்படுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகள் அவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுத்தால் முறைப்பாடு செய்யுமாறும் பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

one nat

‘முழு நாடுமே ஒன்றாக’ ; தேசிய செயற்பாடு – 81 சிறுமிகளுடன் 1,772 சிறுவர்கள் கைது

March 18, 2026

போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

Iran

வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

March 18, 2026

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத்

Mars

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

March 18, 2026

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே

jr

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

March 18, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து

Sanjeeva ethiri

விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

March 18, 2026

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள்

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்