நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தல் 135.90 மில்லியன் ரூபாவில் – பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (05.07.2026) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என் பிரபாகரன், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு