நெடுந்தீவுக்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டிருப்பது போன்று 3 மாதங்களுக்குள் நிறைவேற வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நெடுந்தீவின் இருப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மானசீகமாக உழைத்து வருகின்ற தரப்பு என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அமைப்பதற்கு தீர்மானித்து அதற்கான அடிக்கல் நாட்டியிருப்பதனை வரவேற்கின்றோம்.

இதேபோன்று, கடந்த வருடம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைத்தானத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

ஆனால், அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தற்போது இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகம் அறிவித்திருக்கின்றமை துரதிஸ்டவசமானது.

அது எமக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது. அதுபோன்று நெடுந்தீவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணிகளும் இடைநடுவில் கைவிடப்படாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இதனை விட, தீவகத்தில் இன்னும் பல்வேறு தேவைகள் காணப்படுகின்ற நிலையில் அவை தொடர்பாகவும் இந்த அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும்.

குறிப்பாக, நெடுந்தீவில் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், எம்மால் உருவாக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை மேலும் விஸ்தரித்து அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். அதேபோன்று வைத்தியசாலைக்கு தேவையான குடிநீர் சீரான முறையில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், கடந்த காலங்களில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பனை நடுகை திட்டத்தில் நடப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் பெரிய மரங்களாக வளர்ந்துள்ள போதிலும் பனை அபிவிருத்தி சபையின் சீரான பராமரிப்பு இன்று இருக்கின்ற நிலையில் அவை தொடர்பாக கரிசனை செலுத்தி, பனை வளத்தினை பெருக்க வேண்டும்.

மேலும் நெடுந்தீவின் கிழக்கு பகுதி கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றமையினால் அதனை தடுத்து நிறுத்தி, எம்மால் பாதுகாக்கப்ட்ட அந்த தீவு தேசத்தினை பாதுகாக்க வேண்டிய அவசர கட்டுப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் இந்த அரசாங்கத்தினால் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மக்களினதும் எமதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார்.

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது

cru oil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

July 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு