ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கிய உறுப்பினர்கள் சிலர், நிலக்கரி கொள்முதல் நடைமுறை தொடர்பான சர்ச்சைக்கிற்குரிய குரல் பதிவு குறித்து விசாரணை கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குறித்த குரல் பதிவின் மூலம் இந்த
டெண்டர் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவருவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த வருண ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி கொள்முதலுக்கான ‘ஸ்பொட் டெண்டர்’ (Spot Tender) வழங்கப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இந்த முறைப்பாடு அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்ட நபர்கள், உயர் அதிகாரம் கொண்ட ஒரு தரப்பினரால் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை அந்த குரல் பதிவு உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.