நியூ பிரன்சுவிக் (New Brunswick) நெடுஞ்சாலையில் சரக்கு லாரி (transport truck) மோதியதில் 53 வயதுடைய கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நியூ பிரன்சுவிக்கின் பர்டன் (Burton) பகுதியில் உள்ள சாலை கட்டுமானப் பணியிடத்தில், சரக்கு லாரி மோதியதில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வியாழக்கிழமை காலை 6:15 மணியளவில், நெடுஞ்சாலை 2-ன் (Highway 2) கிழக்கு நோக்கிச் செல்லும் பாதையில் (eastbound lane) நடந்த இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்து ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸார் (RCMP) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட 53 வயது நபர் நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்னொட்டி (trailer) இழுத்துச் சென்ற லாரி அவர் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர். லாரி ஓட்டுநர் உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து தகவல் கொடுத்ததுடன், விபத்து நடந்த இடத்திலேயே தங்கியிருந்தார்.