கடந்த மாத தொடக்கத்தில் நியூமார்க்கெட் (Newmarket) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிலிருந்து தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு யோர்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி யோங் ஸ்ட்ரீட் (Yonge Street) மற்றும் டேவிஸ் டிரைவ் (Davis Drive) பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள நகைக்கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், தங்கச் சங்கிலி ஒன்றைப் போட்டுப் பார்ப்பதற்கு (try on) கேட்டுள்ளார். அந்தச் சங்கிலியை அணிந்தவுடன், அவர் கடையிலிருந்து கால்நடையாகத் தப்பியோடியுள்ளார். அவர் கடைசியாக டேவிஸ் டிரைவ் வீதி வழியாக ஓடுவதைக் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் சுமார் 5 அடி 9 அங்குல உயரமும், நடுத்தர உடலமைப்பும், குட்டையான பழுப்பு நிற முடியும், பழுப்பு நிற பிரெஞ்சு தாடியும் (goatee) கொண்ட ஒரு வெள்ளை இன மனிதர் என விவரிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் (T-shirt), கருப்பு நிற காற்சட்டை, கருப்பு மற்றும் வெள்ளை நிற பேஸ்பால் தொப்பி மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அல்லது சந்தேக நபரின் அடையாளம் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.