ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு, சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தலைவர்(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்.
இதன் மூலம் ஈரானைப் பொருளாதார ரீதியாக முன்னெப்போதையும் விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும் மற்றும் வலிமையானதாகவும் மாற்றுவோம். ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.