நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்களா? – சர்வஜன அதிகாரம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா என்பது குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன டிகுற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான மரணப் பரிசோதனைகளோ அல்லது நீதவான் விசாரணைகளோ நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, அது ஒரு தற்கொலை என ஊடகங்கள் அவசர அவசரமாகப் பிரசாரம் செய்துள்ளன. இத்தகைய உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை உருவாக்குவதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் பெரும் அநீதியை விளைவிக்கின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தாஜுதீன் கொலை, பிரகீத் எக்னெலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குகளைப் போன்றே தற்போதும் முக்கிய சாட்சிகள் மறைக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 323 கொள்கலன்கள் காணாமல் போயின. இது குறித்து முதன்முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய டான் பிரீசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோல், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் முக்கிய சாட்சியாளரான கபில சந்திரசேன மற்றும் 2.5 மில்லியன் டொலர் விவகாரத்துடன் தொடர்புடைய ரங்க ராஜபக்ஷ ஆகியோரும் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பாரதூரமான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அவற்றின் முக்கிய சாட்சியாளர்கள் அல்லது எதிரிகள் கொலை செய்யப்படுவதோ அல்லது தற்கொலை செய்துகொள்வதோ தொடர்கதையாகியுள்ளது.

சி.டி.விக்ரமரத்ன கடந்த வாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளின் போது சாரா ஜாஸ்மின் மரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்காக பல டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான முக்கிய சாட்சியங்களை வழங்கிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்