நாட்டில் நிலவும் பாரிய குற்றச் செயல்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் திங்கட்கிழமை (30) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP சட்டத்தரணி எப். யூ. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை (Red Notice) இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, இன்றைய தினம் ஓமான் நாட்டில் வைத்து தென் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் மீதான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மேலும், கடந்த 28ஆம் திகதி இந்தியாவில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 2026 ஜனவரி மாதம் 4 கிலோவிற்கும் அதிக கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் 4ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, புனித வாரத்தை (Holy Week) முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது பங்குத்தந்தைகளுக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் முப்படையினர் மற்றும் சிவில் உடையில் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார சவால்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 27 சந்தேக நபர்கள் கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 44,811 லீற்றர் டீசல், 2,668 லீற்றர் பெட்ரோல் மற்றும் 2,062 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டிற்காக காவல்துறை திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 7,000 புதிய அதிகாரிகள் மற்றும் 100 சட்டத்தரணிகளை உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2482 மற்றும் 2477) வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 08 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களுக்கு 071-8591925, 011-2505202 மற்றும் 011-2552953 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன