நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையால் வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகள் கணிசமான அளவு பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், இது குறித்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன மேலும் கூறியதாவது:

“பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தயாரித்து முடிக்கவில்லை. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக சுமார் 1,700 தூர இடங்களுக்கான பேருந்துகளுக்கு மாத்திரமே அது தயாரிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளிடமிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில பகுதிகளில் இ.போ.ச டிப்போக்களில் எரிபொருள் வழங்கப்படுகிறது, ஆனால் ஏனைய டிப்போக்களுக்குச் செல்லும்போது அங்கு எரிபொருள் இல்லை என்கிறார்கள். இது ஒரு பாரிய பிரச்சினை.

எதிர்வரும் திங்கட்கிழமை எம்மால் பேருந்துகளைச் இயக்க முடியாது. பெரும்பாலும் பேருந்து சேவைகள் 50% வரை வீழ்ச்சியடையக்கூடும். கடந்த வாரம் எமது பேருந்துகளில் எரிபொருள் இருந்தது, ஆனால் தற்போது அது தீர்ந்துவிட்டது. QR முறைமையின் கீழ் பேருந்துகளுக்கு 60 லீற்றர் மாத்திரமே கிடைக்கிறது. டிப்போக்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்புமாறு அதிகாரசபைகள் அறிவித்துள்ளன. பகல் வேளையில் டிப்போக்களில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பினால் பேருந்துகளைச் ஓட்ட முடியாது. கடந்த சில நாட்களாகியும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கோ அல்லது போக்குவரத்து அதிகாரிகளுக்கோ இன்னும் முடியாமல் போயுள்ளது.”

gun

யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

March 21, 2026

யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச்

kap

அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

March 21, 2026

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக

chandrasekar

அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்

March 21, 2026

எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என

jail

பாதாள உலகக் குழுவினரின் சகாக்கள் 15 பேர் கைது

March 21, 2026

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த

vadd

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

March 21, 2026

ழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில்

56

நாட்டின் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு

March 21, 2026

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை

drug

சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி?

March 21, 2026

காலி – கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20) சந்தேக நபர் ஒருவர்

imf

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை

March 21, 2026

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய

ce

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

March 21, 2026

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

death

முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!

March 21, 2026

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில்

kemunu

நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

March 21, 2026

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு

gff

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

March 21, 2026

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில்