தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மறு விசாரணைக்காக மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மதிசுதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரி அரச தரப்பு சாட்சியாக முன்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொலைக் குற்றச்சாட்டின் பின்னணியில் பிள்ளையானுடன் சம்மந்தப்பட்ட குழுவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.