நவம்பர் 28 – உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.

அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

 

1966ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது.

தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு (Academic Conference) நவம்பர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் 1ஆம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.