நாளை நல்லூரான் வடக்கு வாசல் வளைவு நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படவிருக்கின்றது. யாழ்.சட்டநாதர் சிவன்கோயிலிலிருந்து காலை 10.30 மணியளவில் சமய அனுஷ்டானங்களுடன் நெல்மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டுவண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க சட்டநாதர் வீதியின் ஊடாக முடமாவடிச் சந்தியை அடைந்து புதிய வளைவை நோக்கிப் புறப்படும்.
மேற்படி காளைமாட்டு வண்டியே நெல் மணிகள் உடன் முதன் முதலாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுவண்டியில் வரும் நெல் பெட்டகத்தில் அடியவர்கள் நெல் இடலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.