நடைப்பயிற்சியை சாப்பிட்ட உடன் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

நாள் முழுவதும் உட்கார்ந்து பணிபுரியும் சூழல் பலருக்கும் உண்டு. என்னதான் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலும், நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்வதால் உடல் பருமன், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் மற்றும் அதன் விளைவாக சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தினமும் ஏதாவது ஒரு வேளையில், சாப்பிட்டதும் 10 நிமிடங்கள் மட்டும் நடைப்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்:

உணவு அருந்திய பின்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது இயல்பான ஒன்று. இதைத் தடுத்து சர்க்கரையைச் சீரான அளவில் பராமரிக்க உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. ஆய்வின்படி நீரிழிவு நோயாளிகள் ஒரே நேரத்தில் அரை மணி நேரம் நடப்பதை விட, உணவிற்குப் பிறகு 10 நிமிடங்கள் நடப்பது அவர்களது உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவை மிகச் சிறப்பாகக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு உணவிற்குப் பிறகு நடப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

தசைகளின் குளுக்கோஸ் நுகர்வு:

நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குளுக்கோஸாக மாறும்போது, அதை உடலின் தசைகள் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் நடப்பது கூட இரத்தத்தில் இன்சுலின் மற்றும் சர்க்கரை அளவின் திடீர் உயர்வைத் தடுக்கிறது. நாம் நடக்கும்போது தசைகள் சுருங்கி விரிந்து இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை இன்சுலினின் தேவையின்றி நேரடியாக உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் கணையத்திற்கு அதிக சுமை ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது.

உணவு உண்ட பின் பலருக்கும் ஏற்படும் முக்கியப் பிரச்சினை செரிமானமின்மையும் வயிறு உப்பசமும் ஆகும். இவர்கள் உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சி மேற்கொண்டால், அவர்களின் குடல் அசைவுகள் சீராகி செரிமானப் பிரச்சினைகள் குறைகின்றன. நடைபயிற்சி செரிமான மண்டலத்தைத் தூண்டி, உணவு எளிதாகக் குடலுக்குள் நகர உதவுகிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லைகள் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன.

இதய ஆரோக்கியம்:

உணவுக்குப் பிந்தைய சிறு நடைபயிற்சி இதயத்திற்கும் நன்மை செய்கிறது. நடக்கும்போது இரத்த அழுத்தம் சீராகிறது. உணவு உண்டபின் நடப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தமனிகளின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தைப் பெருமளவு குறைக்கிறது. தொடர்ச்சியாக இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் போது இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து இதயம் வலுவாகிறது.

யாரெல்லாம் உணவுக்குப் பிறகு நடக்கக் கூடாது?

உணவுக்குப் பிறகு மிதமான நடைபயிற்சி பெரும்பாலானோருக்கு நன்மை என்றாலும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். குறிப்பாக, மாரடைப்பு அல்லது கடுமையான இதயச் செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதல் இன்றி சாப்பிட்ட உடனே நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கடுமையான மூட்டுவலி, கீல்வாதம் அல்லது கால் நரம்பு பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக நேரம் நடப்பது வலியை அதிகரிக்கும் என்பதால் மருத்துவரின் அறிவுரைப்படி சிறிய அளவில் மட்டுமே நடக்க வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் சமீபத்தில் பெரிய அறுவை சிகிச்சைகள் செய்தவர்களும், மருத்துவர் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் வரை இத்தகைய நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். உணவுக்குப் பின் செய்யப்படும் நடைபயிற்சி என்பது வேகமாகச் செய்யும் உடற்பயிற்சி அல்ல, மாறாக மிக மெதுவான மற்றும் மிதமான நடை மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

8

“ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால் பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்!” – முதல்வர் விஜய் அறிவுரை!

October 29, 2026

சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்து

7

“ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!” – மு.க.ஸ்டாலின் பதிவு!

October 29, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1200-675-27986933-thumbnail-16x9-mayor

“பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க!” – மேயர் பிரியா ஆவேசம்!

October 29, 2026

“‘சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் பிரியா, துணை

5

“காலை ஆபீஸ்… மாலை வீடு… அரசு ஊழியரா முதல்வர் விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

October 29, 2026

மதுரை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்த நிலையில், தற்போதைய ஆறு மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள்

4

“சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே என் வீட்டில் சோதனை” – கே.என்.நேரு பேட்டி!

October 29, 2026

திருச்சி: மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் திசை திருப்பவே தனது வீட்டில் சோதனை நடந்துள்ளது என்று முன்னாள்

3

“மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளிலும் இலவச பயணம்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

October 29, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மட்டுமின்றி, அரசு விரைவுப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் இனி இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று

2

“மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் கொலைகள், பாலியல் கொடுமைகள்!” – புள்ளி விவரங்களை வெளியிட உள்ளதாக வைகோ ஆவேசம்!

October 29, 2026

சென்னை: கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் எண்ணற்ற கொலைகள், காவல் துறை மரணங்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் நடந்திருப்பதாகவும், அதன்

1

“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்!” – சீமான் அறிவிப்பு!

October 29, 2026

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது

arrest1

ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது: காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்

October 29, 2026

பொலிஸ் காவலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC)

Human

ஹோமாகம சந்தேகநபரின் மரணம்: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

October 29, 2026

பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மேலும் இரண்டு

123

உடற்பயிற்சிக்குள் கால் ஆட்டும் பழக்கமும் உள்ளடங்குகிறதா?

October 29, 2026

அமர்ந்திருக்கும்போது கால் ஆட்டுவது, மொபைலில் பேசும்போது நடப்பது உள்ளிட்ட தற்செயல் உடல் அசைவுகளும் இதய ரத்தக் குழாய் நோய்களின் அபாயத்தையும்

222

நடைப்பயிற்சியை சாப்பிட்ட உடன் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

October 29, 2026

நாள் முழுவதும் உட்கார்ந்து பணிபுரியும் சூழல் பலருக்கும் உண்டு. என்னதான் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலும், நாள் முழுவதும் அமர்ந்து வேலை