தமிழ் திரையுலகின் சிறந்த நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முனீஸ்காந்த் ,ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை குட் ஸ்டஃப் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டில்லி தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.