த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

நெல்லை:

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது :- த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்படுகிறது. த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜனதாவின் ‘சிலீப்பர் செல்லாக’ இயங்குகிறது. பா.ஜனதா மிரட்டுவதற்கு ஏற்ப செயல்படாவிட்டால் தங்களுக்கு வரும் நிதி நின்றுவிடுமோ என்ற பயத்திலேயே த.வெ.க. அரசு செயல்படுகிறது.

மக்கள் மீது அரிசி விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என பொருளாதார சுமையை சுமத்தி விட்டு, சட்டமன்றத்தையே ஒரு திரைப்படக் கொட்டகை போலவும், தயாரிப்பு நிறுவனம் போலவும் மாற்றி சினிமாவை வேடிக்கை பார்க்கும் அரசாக இது உள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தில் நான்கு அமைச்சர்கள் நடித்துள்ள சூழலில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் விடாதவர்கள் இப்போது அந்த படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்டு. ஆனால், ‘சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்’ என முதல்-அமைச்சர் விஜய் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமமான ஜனநாயக உரிமை மீறலாகும். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும். இதுமட்டுமன்றி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதும் தான் த.வெ.க. அரசின் நிஜ முகமாகும் என்று அவர் கூறினார்.

#Ragupathy #DMK #TVK #Markandeyan #Palayamkottai #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #PoliticalNews #TamilNaduNews #Politics2026 #ExMinisterRagupathy #TamilPolitics

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி

de

டெங்கு பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

July 26, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று

wea

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

July 26, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால்

vehicle

1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்

July 26, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்