தொடரும் போர் பதற்றங்கள்; விமானக் கட்டணங்கள் இருமடங்காக உயரும்!

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் ஜெட் எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது. தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என பிரதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை உயர்வு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பதில் தலைமை நிர்வாக அதிகாரி வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பழைய விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதால், அந்தப் பயணிகளிடம் மேலதிக கட்டணத்தை வசூலிக்க முடியாது. இது நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இழப்புகளை ஈடுகட்ட உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பகுதிகளுக்கான விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுக்கான பயணிகளின் வருகை சீராக உள்ளது.

வருவாயைப் பெருக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கான மேலதிக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இலங்கையின் கடல்சார் துறை மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களின் வருகை அட்டவணையில் இதுவரை மாற்றங்கள் ஏற்படவில்லை என பிரதி அமைச்சர் கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Nilan

இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலப்பரப்பை வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

March 22, 2026

தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை

sman

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

March 22, 2026

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும்

Ali

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது – அலி சப்ரி

March 22, 2026

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது

lan

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

March 22, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை

auto

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

March 22, 2026

பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர

NAMAL

மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

March 22, 2026

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக்

Surya

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

March 22, 2026

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம்

vij

விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

March 22, 2026

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும்

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

kal

பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

March 22, 2026

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ்

muth

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவின் முதல் முதலாய்’ பாடல்

March 22, 2026

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில்

Nalinda

இலங்கைக்கு மார்ச் 25 இல் 37இ000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் வருகிறது!

March 22, 2026

சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார