சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் இடையே இன்று அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி:
“தொகுதி மறுவரையறையில் 543 எம்.பி-க்கள் என்ற எண்ணிக்கையை அப்படியே முடக்கும் (Freeze Delimitation) நிலைப்பாட்டில் த.வெ.க அரசு உறுதியாக உள்ளது; ‘Fair Delimitation’ எங்களுக்குத் தேவையில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் வாஜ்பாய் கொண்டுவந்தது போன்ற ஒரு சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்; நாடாளுமன்றத்தில் மசோதா வரும்போது திமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்யாமல் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.”
உதயநிதி ஸ்டாலின் கேள்வி:
“சட்டப்பேரவை தீர்மானத்தில் 543 எம்.பி-க்கள் என இருந்தாலும், தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அந்த 543 என்ற எண்ணிக்கையைக் குறிப்பிட்டுப் பேசவில்லை.”
ஈபிஎஸ் மற்றும் பா.ம.க விமர்சனம்:
“தமிழ்நாட்டின் எம்.பி-க்கள் எண்ணிக்கை கூட வேண்டுமா, குறைய வேண்டுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்,” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். முந்தைய கூட்டங்களில் ‘Fair Delimitation’ எனக் கூறிவிட்டு, தற்போது த.வெ.க மற்றும் காங்கிரஸ் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதாகப் பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ்குமார் குற்றஞ்சாட்டினார்.
பா.ஜ.க & அமைச்சர் வன்னி அரசு மோதல்:
தொகுதி மறுவரையறை மூலம் தமிழக எம்.பி-க்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும் வாய்ப்புள்ளதால் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, “அமித் ஷா மாற்றி மாற்றிப் பேசுகிறார்; பா.ம.கவினர் ராமதாஸை விட மோடி, அமித் ஷாவைச் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர்,” என்று விமர்சித்தது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
#TNDelimitation #TNAssembly #AadhavArjuna #UdhayanidhiStalin #EdappadiPalaniswami #TVKGovernment #DMK #AIADMK #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates