தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்க ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் ஒன்றிணைய அழைப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும் வகையில் மீண்டும் தலைதூக்க முனையும் பிரிவினைவாதக் கருத்தியல்களையும் அதற்குத் தூண்டுதல் அளிக்கும் சக்திகளையும் தோற்கடிப்பதற்கு, இனம், மதம், கட்சி பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் அழைப்பாளர் பந்துல அத்துகோரல அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பிரிவினைவாதக் கருத்தியலுக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையினாலேயே நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டியுள்ளோம். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற மற்றும் சேவையை நிறைவு செய்த இராணுவ வீரர்களின் சங்கம் என்ற ரீதியில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவதே இதன் நோக்கமாகும்.

குறிப்பாக, 1990 ஜூன் மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் இருந்த சுமார் 600 ஆயுதமற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமையானது இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பத்தைக் குறித்தது.

ஜூன் 11ஆம் திகதி நடைபெற்ற அந்தச் சோகமான சம்பவத்தை நாம் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், 1987 ஜூன் மாதம் 4ஆம் திகதி இந்திய அரசாங்கத்தினால் எமது வான் பரப்பு வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகால மோதலுக்குள் சர்வதேச தலையீடுகள் எமது நாட்டுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தேர்தல் பிரச்சாரத்தின் போதும், எமது நாட்டின் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவை மே தின பேரணியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே படுகொலை செய்தது.

அத்தகைய கொடூரமான அமைப்பைத்தான் 2009 மே 18 அன்று நந்திக்கடல் களப்பில் வைத்து எமது இராணுவ வீரர்கள் முழுமையாகத் தோற்கடித்தனர்.

இந்த யுத்தத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படைகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை உட்பட அனைவரும் உண்மையான இராணுவ வீரர்கள் ஆகும்.

இந்தியப் பிரதமர் ஒருவரையே படுகொலை செய்யும் அளவுக்குப் பலம் வாய்ந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை இலங்கையின் ஆயுதப் படைகளே முடிவுக்குக் கொண்டு வந்தன.

ஆனால், கடந்த சில நாட்களாக நாம் பல்வேறு விடயங்களைக் காண்கிறோம். இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் என்ற ரீதியில் எமது அமைப்பு பிரிவினைவாதத்தை முற்றாக எதிர்க்கிறது. அன்று போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு, இரண்டாகப் பிரியவிருந்த நாட்டை, எமது அரசியலமைப்பை பாதுகாக்க முப்படைகளாலும் அரசியல் அதிகாரத்தினாலும் முடிந்தது.

அவ்வாறு பாதுகாக்கப்பட்ட நாடு மற்றும் அரசியலமைப்பு என்பவற்றின் காரணமாகவே, இன்று தமிழ் புலம்பெயர் சமூகத்தினரதும் பிரிவினைவாதக் குழுக்களினதும் பிரதான இலக்காக இந்த இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து எமது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தோற்கடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிற்குச் சென்று, ஏற்படவிருக்கும் இந்த ஆபத்து குறித்து அவர்களை விழிப்புணர்வூட்டும் பணிகளிலும் ஈடுபடுவோம்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை