தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலம் இலங்கையின் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஆவணம் என்பது தெளிவாகிறது.

ஆனால் அதனை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் பல சிக்கல்கள் மற்றும் இதுபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதின் ஊடாக இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கும், நிலைக்கொண்டிருக்கும் ஊடக கலாச்சாரத்திற்கும் ஏற்படக்கூடிய அழுத்தம் தொடர்பிலும் பல விடயங்களை கதிக்காக கலந்துரையாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

இதன் போது குறிப்பாக நிறுவனத்தின் தன்மை, அதாவது இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனமானது கட்டமைக்கப்பட்ட அரச நிறுவனமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வது மிக அவசியமாக உள்ளது. அது அவ்வாறாக இருந்தால், இலங்கை ஊடக சமூகம் எதிர்பார்க்கும் சுயாதீன நிறுவனமாக அமையாவிட்டால் இலங்கையின் சுதந்திர ஊடக கலாச்சாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.

அதேபோன்று நிறுவனத்தின் அலுவல்களை முகாமைத்துவ மற்றும் நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் இடைக்கால சபையானது அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளரின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிப்பதின் ஊடாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால் செய்தி ஆசிரியர் சங்கம், டிஜிட்டல் ஊடக ஒலிபரப்பாளர்களின் சங்கம் பத்திரிக்கை வெளியிட்டார்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் இணக்கபாடும் இதற்கு பெறுவது முக்கியமாக இருக்கும்.

மேலும் உத்தேச இலங்கை பட்டய ஊடகவியலாளர்களின் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடைக்கால சபையின் ஒரு வருடத்திற்குப் பின் உறுதிப்படுத்தப்படும் நிர்வாக குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில் ஏற்படக்கூடிய பாதக நிலைகள் மற்றும், முடிவுகள் எடுக்கும் போது பெரும்பான்மை வாக்குகள் ஐவருக்கு என்று முடிவு செய்து இருப்பதின் காரணமாக மூவரைக் கொண்ட குழுவிற்கு முடிவுகளை எடுக்க முடியாமல் போகக்கூடிய சூழல்களில் ஏற்படக்கூடிய பாதக நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால் நாட்டின் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைப்பு என்ற விதத்தில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்புகளிடத்திலும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இதனை முழுமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இலங்கையின் ஊடக மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அரசாங்கம் தற்போது தயாரித்துள்ள தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்து ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்லுமாறும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற விதத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்