வலி. வடக்கு, தெல்லிப்பழை சந்தியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் புகைப்படங்களை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவாலயத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று முதல் தினமும் மாலை 6.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும், எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 27ஆம் திகதி இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.