களுத்துறை – பயாகல, மெட்டியமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் – 02, அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 10, கைவிலங்கு மற்றும் அதன் சாவி – 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், அவருக்கு உதவியாக இருந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 55 மற்றும் 61 வயதுடையவர்கள் எனவும் பயாகல மற்றும் கலகெடிஹேன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.