திருகோணமலை – உவர்மலை, லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (07.03.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள் இருப்பதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இந்த வீட்டின் உரிமையாளர் 1993ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் எனவும் 27.02.2026 அன்று இலங்கைக்குத் திரும்பிய நிலையில் அவரது மூத்த சகோதரர் வீட்டில் தங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த கைக்குண்டினை திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று மாலை செயலிழக்க செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.