“திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளை தற்காலத்தோடு ஒப்பிடும் போது வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது”

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளைத் தற்காலக் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை, வள்ளுவர் அன்றே,

‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற குறளின் மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளார். நாம் ஒருவருக்குத் துன்பம் இழைத்தால், அது நிச்சயம் நமக்கே திரும்பி வரும் என்ற வாழ்வியல் உண்மையை அறிவியல் பூர்வமாக அவர் அன்றே எடுத்துரைத்துள்ளார்.

மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறும் நூல் திருக்குறள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் வகுத்த பாதை மிக அழகானது. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்று அவர் கூறியது போல, அறநெறியில் நின்று வாழும் மனிதன், வானுலகில் உள்ள தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுவான். இத்தகைய உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறளைப் படித்து, அதன்படி நடப்பவர்கள் வாழ்வில் சகல நலங்களையும் பெறுவார்கள்.

இத்தகைய பெருமைமிகுந்த திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் நடைபெறுவது எமக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. இம்மாநாடு இங்கு நடைபெறுவதற்குக் காரணமான வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் பாராட்டுக்குரியவர். அவர் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் ஒன்றிணைத்துப் பயணிக்கும் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றார். அவர் தனது பெயரைப் போலவே ஒரு ‘அற்புதமான’ மனிதராகச் செயற்படுகின்றார்” என ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றத்தின் பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பாஞ்.இராமலிங்கம், சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. மாவை.சோ.தங்கராசா, முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40-இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

மரணதண்டனை குறித்து இறுதிதீர்மானம் எதனையும் எடுக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

September 16, 2026

மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் இது தொடர்பில்

Gnanasara-Thera

அச்சமடைந்து தப்பியோடி தலைமறைவாக வாழப்போவதில்லை – ஞானசார தேரர்

September 16, 2026

நாங்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அச்சமடைந்து தப்பியோட மாட்டோம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு

namal raja

23ம் திகதி வரை நாமலுக்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு

September 16, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை

arrest

துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை – பிரதான சந்தேகநபர் சரணடைவு!

September 16, 2026

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த

1789488000715-z3gmjhhw1sg

ரூ. 15,300+ கோடி முதலீடுகள்: வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

September 16, 2026

சென்னை: தமிழகப் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் தொலைநோக்கு இலக்கின் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு 5

c871a411dced4b87ef8de15c75c7df55

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்! – அனல் பறக்கும் தேர்தல் களம்

September 16, 2026

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்

dailythanthi_2026-09-16_0scncb4d_1

இனி பெண்களும் எளிதாகப் பனை மரம் ஏறலாம்: கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி புதிய இயந்திரம் அறிமுகம்!

September 16, 2026

தூத்துக்குடி: பனை மரம் ஏறும் கடினமான பணியை எளிமையாக்கும் வகையிலும், பெண்களும் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாப்பாக மரம் ஏறும் வகையிலும்

HR3-dzLbAAAPxC

பாதுகாப்பு காரணம்: லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து!

September 16, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தின் இறுதிக்கட்ட

3536fman1_1509chn_1

பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: 9 மீனவ கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானம்!

September 16, 2026

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள 9

Bar-council

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் போட்டியின்றித் தேர்வு!

September 16, 2026

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் (Bar Council) தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்

omni-buses-strike (1)

ஆம்னி பேருந்துகளில் தீவிரத் தணிக்கை: 5 நாள்களில் 1,169 பேருந்துகளிடம் ரூ.59 லட்சம் வரி மற்றும் அபராதம் வசூல்!

September 16, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்

seeman-2-2026-09-9140eadae21de155d20fbb5c65becf7b-1200x800

“ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது!” – விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் ஆவேசப் பேச்சு

September 16, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகக் கருதிக்கொண்டு நடிகர் விஜய் சேதுபதியைத் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருவதற்கு