திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் ஏற்க முடியாது என்றும், கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக மக்களின் நலனுக்கான திமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்ததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பெரியண்ணன் மனநிலையில், திமுக எங்களை புறக்கணித்தது. அதேபோல, நான் திமுக கூட்டணியில் இருப்பதை தமிழரல்லாத, தமிழர் விரோத அதிகாரிகள் விரும்பவில்லை. எனவே என்னை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற அவர்கள் திட்டமிட்டனர். இதனால் தமிழர் விரோத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு திமுக தலைமை தவாகவை புறக்கணித்துள்ளது.

சமூக நீதி இயக்கமான திமுக ஏன் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறது. வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை தடுத்த சக்தி எது?. தமிழக வேலை தமிழருக்கே என்ற சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாதது ஏன்?. தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது இன்னும் இங்கே சட்டமாகவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக உள்ள சக்திகள் முதல்வர் ஸ்டாலினை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க விடாமல் மறுத்து, அதிகாரிகள் கொட்டமடிக்கிறார்கள் என நான் சொன்ன குற்றச்சாட்டுகளால் இப்போது தேர்தல் களத்திலும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

தவாக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தமிழக வாழ்வுரிமை கட்சி, திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

அதேபோல், நாட்டை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தவாக இடம்பெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.எனவே எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். 25க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் எங்களுடன் ஆலோசித்து வருகின்றன. அவர்களின் கருத்தை கேட்டு கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” என்றார்.

Canada1111

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை கனடா இராஜதந்திர ரீதியில் கையாளத் திட்டம்?

March 22, 2026

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

uk

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

March 22, 2026

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர்,

huwa

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

March 22, 2026

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு

ff

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்!

March 22, 2026

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்

jaf

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடலுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

March 22, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. யாழ்ப்பாணம்

ceb dea

பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

March 22, 2026

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில்

cont

எரிபொருள் விலையேற்றம்; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

March 22, 2026

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ceb

அரசாங்கம் அவசர வேண்டுகோள்

March 22, 2026

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

horm

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

March 22, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது. ஈரான் மீது

Prive bus

மாலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

March 22, 2026

இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில்

minn

பலத்த மின்னல் எச்சரிக்கை

March 22, 2026

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு

dru

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

March 22, 2026

படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படோவிட்ட பொலிஸ் சோதனைச்