தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – விஜேதாச ராஜபக்ஷ

நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. அது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய யுத்த நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதனையும்விட எரிபொருள் நெருக்கடி நிலைமை 2022 ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது. அப்போது இருந்த அரசாங்கத்துக்கு, நாட்டை நிர்வகிக்க முடியாமல் இருந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், நாங்கள் நாட்டை பொறுப்பேற்று, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துகொண்டு நாங்கள் அந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்த்தோம்.

என்றாலும் அன்றிருந்த நெருக்கடி நிலைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாவசம் என்னவென்றால், அன்று நெருக்கடி நிலைமையை பயன்படுத்திக்கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் குழுகள் முழுநாட்டிலும் தீமூட்டி, வீடுகளை எரித்து கொள்ளையடித்தன. இன்று இந்த அரசாங்கத்துக்கு கீழ் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கும்போது யாரும் தீ மூட்ட வரவில்லை. பாராளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு யாரும் வருவதில்லை. மாறாக நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன, அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அத்துடன் தற்போதைய அசாதாரண நிலைமை சுமுக நிலைக்கு வருவதற்கு என்னும் எவ்வளவு காலம் செல்லும் என தெரியாது. என்றாலும் அமெரிக்காவும் ஈரானும் விரைவாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால், குறுகிய காலத்தில் இந்த பிரச்சினை தீர்வதற்கு இடமிருக்கிறது.

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கம் மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலையில் நாங்கள் ஆட்சி செய்யும்போது, தற்போதுள்ள அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தது. துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளுக்கான வருமானத்தை குறைத்து மக்களுக்கு நிராணம் வழங்குவதாகவே அவர்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையிலே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

அன்று எரிபொருளுக்கான வரி யாருடையயாவது பொக்கெட்டுக்கு சென்றிருந்தால், இன்று எரிபொருள் விலை குறைவடையாவிட்டால், அந்த பணம் இன்றும் யாருடையயாவது பொக்கெட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும் என்றார்.

Rav

முள்ளியவளை கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு

March 26, 2026

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம்

dry

புற்றுநோய் மருந்துகள் உலர் மீன்களுக்குள் மறைத்துக் கடத்தல்!

March 26, 2026

புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுமார் 08 இலட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நாத்தாண்டிய – கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள

sun

பொலிஸாருக்கு அதிவிசேட உத்தரவு!

March 26, 2026

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில்

vima

விரைவில் வடக்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கான “சிசு செரிய” பேருந்துச் சேவை

March 26, 2026

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை

ani

சட்ட விதிகளை மீறி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 38 செல்லப்பிராணிகள் மீட்பு!

March 26, 2026

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98

cour

நீண்ட காலமாகத் தேங்கியிருந்த நீதிமன்ற வழக்கு பொருட்கள் மூலம் ரூ. 953 மில்லியன் வருமானம்!

March 26, 2026

நாட்டிலுள்ள நீதவான் மற்றும் மேல் நீதிமன்ற வளாகங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த வாகனங்கள், மரக்குற்றிகள் உட்பட வழக்குப் பொருட்களை அப்புறப்படுத்தும்

anura

‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ தேசிய நாமல் உயன!

March 26, 2026

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு

vijeda

தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – விஜேதாச ராஜபக்ஷ

March 26, 2026

நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு

Vaal veddu

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்; யாழ்.பண்ணையில் சம்பவம்!

March 26, 2026

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட

sara

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைக் கைது செய்தமை தேசத்துரோக செயல்

March 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள்

jail

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் 56 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: ஐவர் கைது

March 26, 2026

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களும், சில

Andra

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 14 பேர் உடல் கருகிப் பலி

March 26, 2026

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது.