தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த தரத்தையுடைய நிலக்கரியால் ஏற்பட்டதாகக் கருதப்படும் மதிப்பிடப்பட்ட இழப்பை விட, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகை அதிகமாகும் எனவும், இதனால் பொதுமக்கள் அல்லது அரசாங்கத்திற்கு எவ்வித நிதிப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் இராஜினாமாவைத் தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற விசேட அரசாங்க ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.