தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஏன் அவசியம்? ; பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் என்பவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்pன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ{க்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் வெள்வேறு காரணங்களினால் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை லோரா போஃபில்ஸ{டன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் குறித்தும் மிக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டியதன் அவசியம், மனித உரிகைளைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தல், ஜனநாயக மற்றும் சட்டவாட்சி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களுக்கான சமத்துவம், அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அத்தோடு இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதியானதும், கண்ணியமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்கள் பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தனர்.

அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமான அரசியல் முன்னேற்றம் என்பன நாட்டின் எதிர்கால நலனுக்கு இன்றியமையாதவையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நிலையான அரசியல் தீர்வை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா வழங்கிவரும் ஆதரவுக்கு தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் தமது நன்றியை வெளிப்படுத்தினார்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்