தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுவார்த்தை

மிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த 18 ஆம் திகதி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்’ என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டு நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகிறது.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்