தமிழர் சமூகத்தின் கனவுத் திட்டமான தமிழ்ச் சமூக மையம் தொடர்பான முக்கிய அறிவிப்பு எதிர்வரும் ஜூலை 24, 2026 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
ரொறொன்ரோ நகரின் மேயர் Olivia Chow மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, தமிழ்ச் சமூக மையக் காணி திட்டத்திற்கு டொரொண்டோ நகரின் தொடர்ச்சியான ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
📅 திகதி: வெள்ளிக்கிழமை, ஜூலை 24, 2026
🕟 நேரம்: மாலை 4:30 (30-45 நிமிடங்கள்)
📍 இடம்: 251 Staines Road (முன்பு 311 Staines Road)
பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்யவும்:
🚗 வாகனத்தில் வருபவர்கள் தெருவோர நிறுத்தத்தைத் தவிர்க்கவும். நிகழ்விடத்தில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தன்னார்வலர்கள் வழிகாட்டுவார்கள்.
தமிழர் சமூகத்தின் வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.