தமிழர்களையும் ஒடுக்குவதற்கே அரசை பாதுகாப்பதற்கான சட்டம் – அருட்தந்தை சத்திவேல்

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெடுக்கு நாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை. அதனை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தல் வரும்” என புத்தசாசன அமைச்சர் கூறி உள்ளமை சிங்கள பௌத்தர்களுக்கு புது வருட பரிசா? எனக் கேட்பதோடு இது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முகம் கொடுக்கும் அரசியல் தோல்வியை மறைத்து தமிழர்களின் கோபத்தில் அரசியல் செய்ய நினைக்கும் நரித்தனமாகும். இதனை வடக்கு- கிழக்கு தமிழர் தாயக அரசியல் கோட்பாட்டினின்று வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் தங்களின் பிழையான பொருளாதார மற்றும் அபிவிருத்தி கொள்கையாலும் ஊழல்,கொள்ளை காரணமாகவும் நாடு பாதாளத்தில் வீழ்ந்தப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இனவாதத்தை கையில் எடுத்தனர். அதனை பாதுகாத்துக் கொள்ள சிங்கள பௌத்தத்தை முன்னிலை படுத்தியே மக்களை மயக்கி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதே வரலாறு. அதே பாதையிலேயே தற்போது தேசிய மக்கள் சக்தியும் பயணிக்க முனைவது ஆச்சர்யமான விடயமல்ல. இவர்களுக்கு வாக்களித்து ஏமாந்த தமிழர்கள் உணர்கின்ற காலம் இது எனலாம்.

மாற்றத்தை மகுடமாக்கி ஆட்சியை தமதாக்கிய தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில்; நிலக்கரி ஊழல் காரணமாக மக்கள் முன் மூக்குடைப்பட்டு நிற்கையில் புத்த சாசன அமைச்சர் சிங்கள பௌத்தத்தை சூட்சுமமாக பாவித்து தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி தெற்கினை வடக்கிற்கு எதிராக கிளர்ந்தெழ செய்யவிட்டு இன சமய முறுகல்களில் அரசியல் பாதுகாப்பு தேடுவது நாகரீகமற்ற அரசியலாகும்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றது.நடந்த பிழையினை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தவறிய ஜனாதிபதி அப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்தமை நாம் அறிவோம். தற்போது வவுனியா வெடுக்குநாறி கோயில் வளாகம் அதன் பூமி பிரதேசத்தையும் தொல்லியல் திணைக்களமூடாக சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முனைவது தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் மூலோபாயம் என்றே கூறலாம்.

தமிழ் சைவர்களின் பூர்வீக பக்தி பண்பாட்டுத்தளமான வெடுக்குநாறி மலை பிரதேசத்தை தொல்லியல் திணைக்களம் ஊடாக பறிக்க வர்த்தமானி அறிவித்தல் விடுக்க உள்ளதாக கூறுவது கடந்த கால செயற்பாட்டை தொடர்வதற்கே. ஆயுத யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அதற்கான ஆதரவினை அன்றைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கியதோடு மட்டும் நின்று விடாது இளைஞர்களை திரட்டி கொடுத்து போரை தீவிரப்படுத்தி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது மக்களின் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு எந்த விதமான சேதாரமும் இன்றி தொல்லியல் திணைக்களம் ஊடாக தமிழர் தாயகத்தை பௌத்த ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வர துடிப்பது இராணுவத்தின் செயற்பாட்டினை வேறு வகையில் முன்னெடுப்பதற்கே.

பாரம்பரிய கட்சிகளின் அரசியலால் தொடர் ஏமாற்றம் அடைந்த தெற்கு மாற்றத்திற்காக நடத்திய காலிமுகத்திடல் போராட்டத்தினை தமது அரசியல் கட்சியின் வெற்றிக்கு சாதகமாக்கி கொண்ட தேசிய மக்கள் சக்தி புலமைசார் கல்வியாளர்களின் ஆதரவினையும் தமதாக்கிக் கொண்டது.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயல்பாடுகள் காரணமாக அத்தகைய புலமை சார் கல்வியாளர்கள் முன் கதவாலும் பின் கதவாலும் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிங்கள பௌத்தத்தின் ஆதரவு தளத்தினை தேடி அரசியல் செய்ய நினைப்பதாகவே தோன்றுகின்றது . அரச பயங்கரவாதத்தையும் அதனை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்புக்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே.

தமிழர்களை பொறுத்தவரையில் தொல்லியல் திணைக்களமும் இன்னுமொரு ஆக்கிரமிப்பு இராணுவமே. அதேபோன்றே புத்த சாசன அமைச்சுமாகும். புத்தசாசன அமைச்சர் ஆக்கிரமிப்பு படை தளபதியாகவே செயல்பட முனைகின்றார். இது தொடர்ந்தால் புத்தசாசன அமைச்சருக்கு மார்சல் பட்டமும் கிடைக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசிய அரசியலுக்கு எதிராகவும் தாயக கோட்பாட்டிற்கு எதிராகவும் தற்போதைய அரசு தீவிர செயல்பாட்டை முன்னெடுப்பது தெளிவு. தெற்கின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் தேச தாயக கோட்பாட்டினை சிதைக்கும் முனைப்பு காட்டுகையில் தமிழர் தாயக அரசியலில் ஒன்றான கொள்கையோடு செயல்படல் வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்துவதற்காக ஆயத்தப்படுகின்ற காலகட்டத்தில் அங்கு ஏற்றுகின்ற தியாகசுடர் உயிர் தியாகிகளுக்கு மட்டுமல்ல. தமிழர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்குமானதே. எமது அரசியல் போராட்டமே இருண்ட தேசத்திலிருந்து எம்மை விடுக்கும்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு