தமிழரசுக்கட்சி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது, பொதுச்சின்னத்தைப் பயன்படுத்துவது மற்றும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரிலேயே தொடர்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இறுதி முடிவெடுக்க தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவைக் கூட்ட வேண்டியுள்ளது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாகத் தெளிவான முடிவு எட்டப்படாததால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி தனது கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தி முடிவுகளை எடுக்க முனைந்தால், அவர்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்த தரப்பாகச் செயற்படும் என அதன் தலைமைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.