தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து

கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் வழங்கிய பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.

அன்று எமது மக்களின் துயர்துடைக்க எவ்வாறெல்லாம் தமிழ்நாடு துணை நின்றதோ, அதே போன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் பேரவலத்திற்குப் பிறகும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்தவகையில், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எங்களுக்குண்டு. தங்களின் பணி சிறக்க எமது வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த