தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை வினோதினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்து வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில், 1,000 ரூபாய், 2,000 ரூபாய், 2,500 ரூபாய், தங்க மோதிரம் என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் இதற்காக என்னால் வரி செலுத்த முடியாது என்று தடாலடியாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது.

அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் குல விளக்கு திட்டம் என்ற பெயரில் 2,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தான் வினோதினி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழகம் போன்ற வளர்ச்சியை நோக்கி நகரும் மாநிலங்களில் கடன் சுமை என்பது பெரிதாக உள்ளது. இதனால் தனி நபர் மீதான சுமையை அதிகரிக்க வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விலைவாசி உயர்வில் கொண்டு போய் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படியான சூழலில் மேலும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது கடன் சுமையை தாங்க முடியாத அளவிற்கு ஏற்றிவிடும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையிலான தொலைநோக்கு திட்டங்கள் உடன் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளும் கட்சி காய் நகர்த்த வேண்டியுள்ளது.

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

இந்த ஆண்டின் இரண்டு மாத காலப்பகுதியில் 3600 வீதி விபத்துக்கள்!

March 9, 2026

இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்

52360

போர்ப் பதற்​றம்; 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

March 9, 2026

போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம்

f

மீனோடு இணைத்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை

March 9, 2026

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

os

ஒஸ்லோ அமெரிக்கத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு?

March 9, 2026

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று 8, அதிகாலை 1 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு

aruna jeya

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் பதற்றமடைய தேவையில்லை

March 9, 2026

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பும் நாட்டின்

for

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

March 9, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல்

sure

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; சுரேஷ் சாலே தொடார்பான பல மர்மங்கள் வெளிப்படுகின்றன?

March 9, 2026

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன்

Ravika

தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

March 9, 2026

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி

evu

234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

March 9, 2026

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

akku

அக்குரணையில் தீ

March 9, 2026

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று

mes

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

March 9, 2026

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள்

kug

யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

March 9, 2026

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய