சென்னை:
தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம் இன்று (ஜூலை 26) தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இதற்கு முன்னதாக, அக்கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம் பேசுகையில், \”நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மேலும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதும் நீட் நடைமுறையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிலைப்பாடு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, அரசிடம் உரிய அனுமதி பெற்று விரைவில் அடுத்த கட்ட போராட்டம் தொடங்கப்படும். அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும். நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்தை அணுகியும் சட்டப்போராட்டம் நடத்த வேண்டும்\” என்று தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கல்வி முறைகள் தற்போது நடைமுறை உள்ள நிலையில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை திணிப்பது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
#NeetExams #Maniratnam #TamilNadu #NeetProtest #NationwideAgitation #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #MedicalEntrance #StudentRights #PoliticalNews #TamilNewsLive