டொராண்டோ டவுன்டவுன் (Downtown Toronto) பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணியளவுக்குச் சற்று முன்னர் ‘சர்ச் வீதி’ (Church Street) மற்றும் ‘அடிலெய்ட் வீதி கிழக்கு’ (Adelaide Street East) சந்திப்பிற்கு அருகில் நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் விரைந்தபோது, அங்கு கத்திக் குத்துக் காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் அவசர மருத்துவ உதவியாளர்களால் (Paramedics) கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் நடந்த இடத்திலேயே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.