டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வோஷிங்டனில் பரபரப்பு

மெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் சர்ச்சைக்குரிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முன்பகுதியில் நிற்பது போன்ற அதே பாணியில், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இருக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் கீழ், “டைட்டானிக் படத்தில் ஜாக்கும், ரோசும் இணைந்திருந்தது போல, டிரம்பும், எப்ஸ்டீனும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தனர்” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

‘சீக்ரெட் ஹேண்டஷேக்’ (Secret Handshake) என்ற கலைஞர் குழுவினர் இந்தச் சிலையை நிறுவியுள்ளனர். சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டது. அதில் டிரம்ப் உட்பட பல உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தச் சிலை ஒரு முக்கிய அரசியல் விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் நகரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதுடன், அதன் முன்னால் நின்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இணையதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் சிக்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். அதேபோன்றதொரு விசாரணை மற்றும் நடவடிக்கை டிரம்பிற்கு எதிராகவும் பாய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

arrest

சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது

March 11, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட

cu

454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள் தொகை பறிமுதல்

March 11, 2026

சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான

lau

இன்று நள்ளிரவு முதல் லாஃப் விலையும் அதிகரித்தது

March 11, 2026

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 300

hur

ஆபத்தான கண்ணிவெடிகளை ஹார்முஸ் ஜலசந்தியில் இறக்கிய ஈரான்!

March 11, 2026

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா

kim

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

March 11, 2026

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை

45

வடக்கின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் 10 சதவீதமாக உயரும்!

March 11, 2026

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது, எதிர்வரும்

sur4

சிறையில் சுரேஷ் சலேவை கொலை செய்ய சதித் திட்டம்?

March 11, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சிறையில் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்

44

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் மண்டைதீவு சுற்றுலா மையம் தொடர்பாக முறைப்பாடு

March 11, 2026

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர்

Daugh

ஒன்டாரியோவில் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை விரிவாக்கப்பணிகள் ஆரம்பம் – முதல்வர் டக் பேர்ட்

March 11, 2026

ஒன்டாரியோ அரசு 174 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை (Stevenson Memorial Hospital)புனரமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை

WhatsApp Image 2026-03-11 at 10.45.13

கனடா மிசிசாகா பிரதேச திருட்டு விசாரணை; 13 வாகனங்கள் மீட்பு

March 11, 2026

பீல் பிராந்தியம் – 11 டிவிஷன் தானியங்கிப் பதில் வழங்கிக் குழு (Break and Enter Auto Response Unit)மற்றும்