ஞாயிற்றுக்கிழமை யாழில் திறந்த கலந்துரையாடல்: வேலையற்ற பட்டதாரிகள் – அரசியல் பிரமுகர்கள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் தரவுகள் இதுவரையில் இல்லை. நாம் வேலை வாய்ப்புக்களை கோரும் போது தரவுகள் கைவசம் இருந்தாலே , வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

செப்டெம்பர் மாதமளவில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போட்டி பரீட்சை இன்றி நடைபெறவுள்ளதாகவும் அறிகிறோம், எனவே பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறிய ஆண்டு , அவர்களின் துறை சார்ந்த தரவுகள் கைவசம் இருந்தாலே வேலை வாய்ப்பினை சிக்கல் இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் துறையிலும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சரியான தரவுகள் இல்லாததால் , சரியானவர்களை இனம் கண்டு அந்த வேலைவாய்ப்பினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் வடமாகாண அபிவிருத்தி வேலை திட்டங்கள் ஊடாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. பட்டதாரிகள் தொடர்பிலான தரவுகள் இருந்தாலே அவர்கள் சார்பான துறைக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்

எனவே வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்குக்கு நேரில் வந்து தமது பட்டப்படிப்பு தொடர்பிலான விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை , வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் , நாம் வேலை கேட்டு போராட்டங்கள் நடத்தும் போது , சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு கருத்துக்களை முன் வைப்போர், அன்றைய தினம் தந்தை செல்வா கலையரங்குக்கு வருகை தந்து எம்முடன் திறந்த கலந்துரையிடலில் ஈடுபடுங்கள்.

சிலரின் கருத்துக்கள் வேலையற்று இருக்கும் எமக்கு மிகுந்த மனவுளைச்சல்களை தந்திருந்தது.

எனவே சமூக ஊடங்ககளின் கருத்துக்களை முன் வைப்போர் , அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் , பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் , என அனைத்து தரப்பினரையும் திறந்த கலந்துரையாடலுக்கு அழைக்கின்றோம்.

எமது வேலையற்ற பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது , எதிர்காலத்திலும் இந்த பிரச்சனை தொடராது இருக்க என்ன செய்யவேண்டும். எமது கல்வியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன ? எமது பிரதேச வளங்களை நாம் எவ்வாறு ஆக்க பூர்வமாக பயன்படுத்தி எமது பகுதியை அபிவிருத்தி செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான திறந்த கலந்துரையாடலை நாம் மேற்கொள்வோம்

குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் இனிப்பை மெய்க்கும் எறும்புகள் போல ,மாத்திரம் பிரச்சனைகளை தேடி ஓடாது,எந்த காலத்திலும் போராட்ட களங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனையை தீர்க்க முயலவேண்டும்.

எமது திறந்த கலந்துரையாடலுக்கு எந்த பேதமுமின்றி அனைத்து தரப்பினையும் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை