கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியேயுள்ள வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகா சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக வருகை தந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
கனமழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையிலும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.