அனோஜன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் […]

இன்று கொழும்பு வருகிறது பௌத்த தேரர்களின் நடைபயணப் பேரணி

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்திற்கான நடைபயண பேரணி இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது. கடந்த 10ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி, கடுகன்னாவை, கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ ஆகிய நகரங்களைக் கடந்து நேற்று (14) கடவத்தை நகருடன் நிறைவடைந்தது. இதற்கமைய, இன்று காலை கடவத்தை நகரத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயண […]

நடைபயண பேரணியில் தாக்குதல் என்ற சமூக வலைத்தள காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்!

சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். நேற்று (14) யக்கல, வீதியவத்தையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தனிப்பட்ட தேவைக்காக லொறி ஒன்றில் பயணித்த ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக முரண்பாடு முற்றியதால் ஏற்பட்டதாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இங்கிரிய, ஹந்தபாங்கொட பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக நபரொருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலைப் பொலிஸாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இங்கிரிய பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கண்ட குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) காலை இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபாங்கொட பகுதியில் […]