பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகை

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பாலேயே பாகிஸ்தான் அணி இலங்கை வந்தது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி தெரிவித்தார்.

இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாகிஸ்தான் பிரதமரின் சார்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

இக்குழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தமது கிரிக்கெட் அணி உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கிய நட்பு ரீதியான உபசரிப்பு மற்றும் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய அன்பான ஆதரவு குறித்தும் பாகிஸ்தான் அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பிராந்தியத்திற்குள்ளும் வெளியிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது பாகிஸ்தானின் நோக்கம் எனக் குறிப்பிட்ட தூதுக்குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, தொழில் சந்தை மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் விரிவாகக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் விஜயம் மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை ஆகியவை இலங்கைக்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தமைக்காக, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், ‘டிட்வா’ புயல் உள்ளிட்ட இலங்கை மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.