செம்மணி மனித புதைகுழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழர்களுக்கு நீதி பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரிட்டனில் தமிழ் மக்கள் லண்டன் பிரைம்ரோஸ்ஹில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட 583 மனித எச்சங்களை உருவகப்படுத்தும் வகையில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள்வெள்ளை துணிகளை போர்த்தியபடி தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை இராணுவத்தினரால் கூட்டுபாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் குருதி தோய்ந்த சீருடையை அடையாளப்படுத்தும் வகையில் காணப்பட்ட சீருடைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரைம்ரோஸ் ஹில்லில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கான சொர்க்காபுரியாக இலங்கையை சித்தரிக்கும் பிம்பத்திற்கு சவால்விடும் வகையிலும் பொதுமக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துண்டுபிரசுரங்கள் போன்றவற்றை விநியோகித்தனர்.
பிரித்தானிய தமிழர் கூட்டணி,பேர்ள்அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் பிரிட்டனை தளமாக கொண்ட பல புலம்பெயர் தமிழர்கள் இணைந்துகொண்டன.