செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால்  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிப்படுத்தல்களை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் மரண் தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தன்னை சுயாதீன சாட்சியாளராக விடுவிக்கும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ள விடயம்  தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Language Resources

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் -சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள,இனப்படுகொலையின் வயலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

வீரசேகரி பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ,செம்மணிச் சந்தியில் உள்ள கோயிலுக்கு முன்புறத்திலும்,நல்லூருக்குச் செல்லும் பாதையிலும் மனித உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், இராணுவத்தால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.ஆகவே இது மறைக்கப்படகூடியதொரு விடயமல்ல,

உண்மையும், நேர்மையுமான வகையில் இந்த விடயம் ஆராயப்பட வேண்டும். சோமரத்ன குறிப்பிட்டதற்கமைய செம்மணி பகுதியில் இருந்து இதுவரையில் 400 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அதனைக் காட்டிலும் மேலும் 200 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் சூழல் காணப்படுகின்றன.

கொப்பேகடுவ இராணுவத்தளபதியாக இருந்தக் காலத்தில் வேலணை,அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்த இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு மண்டைத்தீவு  தோமையார் தேலாலயத்துக்கு முன்பாக இருந்த கிணற்றிலும், மண்டைத்தீவு செம்பாட்டித்தோட்ட கிணற்றிலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள்.அவர்களின் தாய்,தந்தையர் மற்றும் சகோதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். ஆகவே அந்த புதைகுழிகளும் அகழப்பட வேண்டும்.

கொக்கித்தொடுவாய் பகுதியில் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வாய்கள் பிளந்தவாறு, எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இது மிகவும் பயங்கரமானதொரு செயற்பாடு.

உலகில் மனித குலத்துக்கு எதிராக நிகழ்ந்த மோசமான மனிதப்படுகொலை இதுவாகும்.இந்த எலும்புகூடுகளும், அதனுடனான உண்மையும் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.காலவோட்டத்தில் உண்மைகள் மறைக்கப்பட கூடாது.யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் உண்மை அவ்வாறே மூடி மறைக்கப்பட்டு, புதிய நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் உண்மை இறுதி வரையில் வெளிப்படுத்தப்படவில்லை.இது நாம் விட்ட தவறாகும்.ஆகவே செம்மணியில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எதிர்கால தலைமுறையினர் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த  மிக மோசமான, ஆசியாவில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தின் அடையாளத்தையே செம்மணி மனித எலும்புகூடுகள் பறைசாற்றுகின்றன.

சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால்  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இவற்றை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

காலவோட்டத்துக்கமைய உண்மையை மறைக்க இடமளிக்க முடியாது.சோமரத்ன குறிப்பிட்ட விடயங்கள்  பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்