செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் துரித சர்வதேச விசாரணை வேண்டும்! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறன.100 நாட்களைத் தாண்டி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால் இதுவரை இல்லை.

முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது.

அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது கையளிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக் குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான